திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்42), திருச்சியைச் சேர்ந்த கணேஷ்குமார்(34),முரளி(37),சுரேஷ், ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் வாடகை காரில் திருச்சி சென்றுள்ளனர். காரை கணேஷ்குமார் ஓட்டியுள்ளார். இதில் முரளி, ரவிக்குமார் திருச்சியில் உள்ள தனியார் வங்கி அலுவலர்களாக பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சென்ற கார் விராலிமலை அருகே மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் பின்புறம் மோதியதில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கணேஷ்குமார் மற்றும் சுரேஷ்,ராஜ்குமார், ரவிக்குமார் ஆகிய நான்கு பேர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தனர்.




இதில் முரளி என்பவர் ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.