நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஏராளமான மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். நேபாளத்தின் இயற்கை பேரிடர் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா உடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவரிடம் தனது இரங்கலை தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேபாளம் இடர்பாடு மிகுந்த இந்த நேரத்தில் இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும், மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இந்தியாவின் குழு தயார் நிலையில் இருப்பதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்தியா தயாராகியுள்ளது. இந்திய விமானப்படையின் C-17 மற்றும் C-130 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்குத் தேவையான மண் அகற்றும் இயந்திரங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.