தமிழக பாஜகவின் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் கள்ளிகுடியை சேர்ந்த எம்.ராஜேந்திரன். இந்நிலையில் அவர் கட்சி விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார், இதற்கான அறிவிப்பை திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவரான கே.கே ஒண்டிமுத்து வெளியிட்டுள்ளார்.பாஜக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறி திமுக கூட்டணியில் இணைந்த கே.கே செல்வக்குமாரின் தமிழர் தேசம் கட்சியின் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக கள்ளிக்குடி ராஜேந்திரன் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.