தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு இதுவரை யாரும் சேரவில்லை. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசுடன், தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், யாருடன் கூட்டணி பேச்சு என வெளியில் கூறினால் டெல்லியில் இருந்து வந்து விடுகின்றனர் . என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தானே தெரியும். யாருடன் கூட்டணி பேச்சு என்பதை சொல்லாமல் இருப்பது தான் சரி. டி.டி.வி. தினகரன் சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவை எடுத்திருக்கலாம். ராமதாசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இப்போதுதான் செய்தி வருகிறது. கூட்டணி விவகாரத்தில் நல்லதே நடக்கட்டும் என்றார்.

Comments are closed.