Rock Fort Times
Online News

வேலை இல்லையே என்ற கவலையா?- திருச்சியில் பிப்.7ம் தேதி நடக்கிறது பிரம்மாண்ட வேலை வாய்ப்பு முகாம்…!

திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பிராட்டியூரில் செயல்பட்டு வரும் கேர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வருகிற பிப்ரவரி 7ம் தேதி 300க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் 12000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், www.giveslife.com என்கிற பிரத்தியேக இணையதளத்திலும், 91500 60036, 75300 88293 என்கிற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு நேர்காணலுக்கு முன் பயிற்சிகள் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்