குடியரசு தின விழா: திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை…* சிறப்பாக பணியாற்றிய 759 பேருக்கு நற்சான்றிதழ்!
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி, சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தியதோடு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், 21 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 51ஆயிரத்து, 802 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் என 759 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Comments are closed.