தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வருகிற 28ம் தேதி திருச்சி வழியாக அம்ரித் பாரத் ரெயில் இயக்கம்…!
இந்திய ரெயில்வே வாரியம் புதிதாக அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே இயக்க உள்ளது. வண்டி எண் 16121 தாம்பரம்-திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி காலை 8 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16122 திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் இடையே வருகிற 29-ந் தேதி காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, அன்றையதினம் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய வழித்தடங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.