டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு…* போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை…!
இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று(26-01-2026) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றிய நிலையில், இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா் தூவியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் படை வலிமையை சாற்றும் வகையில், அா்ஜுன் டாங்கி உள்ளிட்ட பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பயன்படுத்தப்பட்ட பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், சூா்யாஸ்திரா ராக்கெட் லாஞ்சா் அமைப்பு, நாக் ஏவுகணை அமைப்பு, நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளன. விழாவில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி குடியரசு தின விழாவை முன்னிட்டு, போர்களில் நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments are closed.