Rock Fort Times
Online News

திருச்சி- தஞ்சை சாலையில் மோட்டார் சைக்கிளுடன் சாக்கடையில் விழுந்தவர் உயிரிழப்பு…!

திருச்சி- தஞ்சை ரோடு, அரியமங்கலம் எஸ்ஐடியில் இருந்து அம்பிகாபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடல் மற்றும் மோட்டார் சைக்கிளை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் அம்ஜத் அலி என்பது மட்டும் தெரிய வந்தது. எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் அவர், நேற்று இரவு மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தபோது நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அம்பிகாபுரம் சாலையில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்குகள் எரியாததால் இது போன்ற சம்பவம் நடைபெறுவதாகவும் ஆகவே இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்