திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு கடந்த டிசம்பர் 16-ந் தேதி வரை தினமும் இண்டிகோ நிறுவனம் 7 சேவைகளை வழங்கி வந்தது. இந்த நிலையில் திடீரென சேவைகளை குறைத்து காலை மற்றும் மாலை என 2 சேவைகளை மட்டுமே வழங்கி வந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். ஆகவே, கூடுதல் விமானங்களை இயக்க கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கும் விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது. 2 சேவைகள் என்பதை 4 சேவைகளாக அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 7.10 மற்றும் காலை 10.10 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மதியம் 2.35 மணி, மாலை 5.25 மணிக்கு வந்தடையும் வகையில் விமானம் இயக்கப்படுகிறது. அதேபோன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 7,35 மணி, 10.35 மணி மற்றும் நண்பகல் 2.55 மணி, மாலை 5.55 மணி ஆகிய நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.