Rock Fort Times
Online News

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!

திடீர் உடல் நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு, திடீர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமைச்சர் துரைமுருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உரிய சிகிச்சை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமவனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும், அங்கிருந்த மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்