அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் இன்று(ஜன. 17) தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். பின்னர் தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.