மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2000, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை… அதிமுகவின் முதற்கட்ட வாக்குறுதிகள்!
2026க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு பின்வருமாறு;
* 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி அறிமுகப்படுத்தப்படும்.
* மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் குலவிளக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்
* அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
* கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி இலவச கான்கிரீட் வீடு கட்டுக்
கொடுக்கப்படும்.
* பொங்கலுக்கு பெண்களுக்கு நல்ல சேதி வரும் என திமுக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அதிமுக தனது முதற்கட்ட தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

Comments are closed.