உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகை தைப்பொங்கல். உழவர்களும், உழவுக் காளைகளுமே இந்தத் திருநாளின் நாயகர்கள். கதிர் அறுவடை செய்து சூரியனுக்கு நன்றி செலுத்த கொண்டாடப்பட்டதே பொங்கல். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 15- ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதன்படி, இந்த ஆண்டு தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை தெரிந்து கொள்வோம். நாளை மறுநாள் தைப்பொங்கல். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பு பொங்கல் வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபடவேண்டும். இதுவே சூரிய பொங்கல் ஆகும். இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்து வழிபட நினைப்பவர்கள் பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரத்தை கவனிக்க வேண்டும். அதன்படி, காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, 10.35 முதல் பகல் 1 மணிவரை. நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11வரை, பிற்பகல் 1 மணி முதல் 01.30 வரை கெளரி நல்ல நேரம் – மாலை 06.30 முதல் 07.30 வரை எமகண்டம் – காலை 6 மணி முதல் 7.30 வரை. ராகு காலம் – பிற்பகல் 01.30முதல் மாலை 3 வரை ஆகும்.

Comments are closed.