திருச்சி, பெரிய சூரியூரில் ரூ.3 கோடியில் அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு மைதானம்… ஜன.15-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலை முன்னிட்டு அலங்காநல்லூர் உட்பட தமிழகம் முழுவதும் உற்சாகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியும் சிறப்பு வாய்ந்தது. இதுவரை கிராம திடலில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக நிரந்தர மைதானம் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 15- ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 16ம் தேதி இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Comments are closed.