Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய 5 பேர் கைது…* நாட்டுத்துப்பாக்கி, கார் பறிமுதல்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று( ஜன. 12) அதிகாலை கார் ஒன்று நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வளநாடு போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது 5 பேர் காரில் வந்திருப்பதும், காரில் நாட்டுத்துப்பாக்கி, லைட்டுகள் மற்றும் இறந்த நிலையில் 3 மயில்கள், ஒரு மயில் குஞ்சு இருப்பதை அறிந்து அவர்கள் 5 பேரையும் பிடித்து மணப்பாறை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 5 பேரும் மயில்களை நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கங்காளிப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 28), திருப்பதி (22), அம்மன்குறிச்சி ஆலவயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25), கருமங்காடு பகுதியைச் சேர்ந்த பரத்குமார் ( 21), சின்னபிச்சம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (25) ஆகிய 5 பேர் மீதும் வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, கார், டார்ச்லைட், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்