தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே முட்டல்- மோதல் நீடித்து வருகிறது. கூட்டணி தொடர்பாகவும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், டாக்டர் அன்புமணி திடீரென அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதுமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், அன்புமணி ஆதரவாளர்களான சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஷ்வரன் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.