Rock Fort Times
Online News

ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ் இல்லை: நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார்போர்டு மேல் முறையீடு…!

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன். இப்படம் இன்று (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த (ஜன.6) நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான தீர்ப்பு (இன்று) ஜன.9 வழங்க முயற்சிப்பதாக நீதிபதி கூறியிருந்தார். இதன்படி ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கில், இன்று நடந்த விசாரணையில், திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு:

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இன்று மனு தாக்கல் செய்தால், பிற்பகல் வழக்கை விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்ததை அடுத்து, இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்