Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெற்றது…!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 30ம்தேதி அதிகாலை நடைபெற்றது. இராப்பத்து உற்சவத்தின் போது தினசரி திறக்கப்பட்டு வந்த பரமபதவாசல் நேற்று இரவு 8 மணியுடன் மூடப்பட்டது. வைகுந்த ஏகாதசியின் 21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு நம்மாழ்வார், நம்பெருமாளின் திருவடிகளில் சரணடந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் மோட்சம் அளித்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். அதனைத்தொடர்ந்து வைகுந்த ஏகாதசி பெருவிழா நிறைவுபெற்றது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்