Rock Fort Times
Online News

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா?- புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு…!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம் பொங்கல் பரிசு தொகுப்பாக  வழங்கப்பட உள்ளது. இதுதவிர விலையில்லா வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது.  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.8) தொடங்குகிறது. இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்