மணப்பாறை அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக வேரோடு அகற்றப்பட்ட மரங்கள்… * புதிய மரக்கன்றுகளை நட்டு வைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதி முதல் கலிங்கபட்டி வரை மணப்பாறை – குளித்தலை சாலையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மரங்களை வேரோடு அகற்றியதுடன் அந்த மரங்களை அகற்றப்பட்ட இடத்தில் பள்ளங்களை மூடாமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்று மரங்களை அகற்றும் போது அதற்கு பதிலாக 2 மரக்கன்றுகளாக நட்டு வைத்திட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இருந்தாலும் அதை இன்னும் பின்பற்றப்படவில்லை. இதனால் சாலை விரிவாக்கபணிகள் என்பது ஏற்புடையதாக இருந்தாலும் புதிய மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.