திருச்சி பாலக்கரை, வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள பேட்டரி வாகன விற்பனை கடை மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக தீ எரிந்ததால் அருகில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் கரும்புகை பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.