Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவை ஜன.20-ல் கூடுகிறது… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

“2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்,” என்றார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்