Rock Fort Times
Online News

திருச்சியில் வட்டமடித்த தனியார் விமானம்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திருச்சி மாநகரில் தனியார் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக வட்டமடித்து பறந்தது. திடீரென வட்டமடித்த விமானத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் தரையிறங்க முடியாத நிலையில் உள்ளதோ என பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக மண்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், விமானம் தரையிறங்குவதும், அங்கிருந்து பறப்பதும் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்விற்காக வந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்தது தெரியவந்துள்ளது. ஆய்வு நிறைவு பெற மேலும் சில நாட்கள் ஆகும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்