தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை…!
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி, காட்டூர் பகுதியில் உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நிர்வாகிகள் இன்று (டிச. 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “எங்கள் வாழ்வுக்கும், தலைநிமிர்ந்து நிற்கும் உரிமைக்கும் தந்தை பெரியாரின் புரட்சியே அடிப்படை. சாதி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகளைத் தாண்டி மனிதகுல சமத்துவத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பெரியாரின் பெயர் இன்று கூட பலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அவரது சிந்தனைகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. தந்தை பெரியாரின் புகழ் என்றும் ஓங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.