‘ராக் சிட்டி சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் ஆப் திருச்சிராப்பள்ளி’ சார்பில் முப்பெரும் விழா கொண்டாட்டம்…!
‘ராக் சிட்டி சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் ஆப் திருச்சிராப்பள்ளி’ சங்கத்தினர், திருச்சி கண்டோன்மென்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் புத்தாண்டு நாட்குறிப்பு மற்றும் பொங்கல் விழா என்ற முப்பெரும் விழாவை 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடினர். சங்கத்தின் தலைவர் இன்ஜினியர் கே.ஆர். சுரேஷ் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக ஆடல், பாடல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் மற்றும் பொறியாளர்களின் இல்லத்தரசிகளுக்கு கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சங்கத்தின் 2026 நாட்குறிப்பை, கே.ஜே.எஸ்.டைல்ஸ் அண்ட் கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் ரகு வெளியிட, ப்ரீ இன்ஜினியரிங் பில்டிங் பங்குதாரர் இன்ஜினியர் கே.எஸ். முருகேசன் பெற்றுக்கொண்டார். சங்கத்தின் நாட்காட்டியை கௌரவ தலைவர் இன்ஜினியர் எஸ்.செந்தில்குமரன் வெளியிட சென்றவாரம் ராய்ச்சூரில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டாளர் மாநாட்டில் அகில இந்திய அளவில் தலைசிறந்த மதிப்பீட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், பாராட்டும் பெற்ற மதிப்பீட்டாளர் இன்ஜினியர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். மேலும், போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளும், உறுப்பினர்களின் குழந்தைகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு கௌரவ தலைவர் இன்ஜினியர் எஸ்.செந்தில்குமரன் புத்தாண்டு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் கௌரவ தலைவர்கள் இன்ஜினியர் பி.அன்புசெல்வன், இன்ஜினியர் பி.இராஜசேகரன், உடனடி முன்னாள் தலைவர் இன்ஜினியர் ஏ. சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் புத்தாண்டு விழா குழு தலைவர் இன்ஜினியர் ஏ.பிரபாகரன், பொருளாளர் இன்ஜினியர் எம். நாகராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் செயலாளர் இன்ஜினியர் பி. சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.


Comments are closed.