Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: திருச்சி மாவட்டத்திற்கு 30-ம் தேதி உள்ளூர் விடுமுறை…!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற ஜனவரி 9-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி வருகிற 30-ந்தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி மாதம் 24-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் வே.சரவணன் அறிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்