Rock Fort Times
Online News

தன்மானம் காக்க தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி…!

தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் – ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் – பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்