Rock Fort Times
Online News

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் ‘சம்பந்தம் பேச வாங்க’ நிகழ்ச்சி… 16-ம் ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது!

திருச்சி ஜில்லா நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘சம்பந்தம் பேச வாங்க’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16-ம் ஆண்டு ‘சம்பந்தம் பேச வாங்க’ நிகழ்ச்சி திருச்சி கீழப்புலிவார்டு ரோடு செல்வ விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கத்தில் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பி.விஜயகுமார் நாயுடு தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கோவிந்தராஜுலு நாயுடு, பொருளாளர் ஆர்.பிரபுராம் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஜாதக பரிவர்த்தனை மற்றும் மணமக்கள் பெற்றோர் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள், இன்ஜினீயர்கள், ஐ.டி. தொழில் முனைவோர், வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தனர். அது மட்டுமின்றி குறைந்த கல்வி பயின்றோர், மறுமணம் புரிவோர் ஆகியோரும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். மேடையில் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து மணமகளுக்கும் தாம்பூலத்துடன் பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்