கோவை, கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸ் பார்க்கிங்கில் புல்லட் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வந்த நல்ல பாம்பு ஒன்று அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது. இருசக்கர வாகன உரிமையாளர் திடீரென பார்த்தபோது, ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த பாம்பு பிடி வீரர், சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். கோவையில் காலை வேளையில் கடும் குளிர் நிலவுவதால், மிதமான வெப்பத்தை தேடி இதுபோன்ற பாம்புகள் வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, பொதுமக்கள் ஹெல்மெட் அணியும் முன் அதை நன்றாக பரிசோதித்து பின்னரே அணிய வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.