திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கில்லாடி பெண்கள் 3 பேர் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சிக்கினர்…!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் 3 பெண்கள் அங்கும், இங்குமாக சுற்றி சுற்றி வந்துள்ளனர். மேலும் அங்கு வரக்கூடிய பயணிகளையும் நோட்டமிட்டு உள்ளனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த மற்ற பயணிகள் அவர்களைப் பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். துவரங்குறிச்சி போலீசார் அந்த 3 பெண்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஊத்துமலை கடங்கநேரியைச் சேர்ந்த அஞ்சலி ( வயது 23), திருநெல்வேலி சுத்தமல்லியைச் சேர்ந்த லட்சுமி( 47), மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த மாரியம்மாள் (29) என்பதும், இவர்கள் திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவர்கள் பஸ் பயணிகளிடமும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Comments are closed.