Rock Fort Times
Online News

டெல்லியில் கடும் மூடுபனி: அடுத்தடுத்து மோதி தீப்பிடித்த பேருந்துகள்! பயணிகள் பலர் பலி?

டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. இந்த சூழலில், அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பேருந்துகளும், இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. பின்னர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதலில் ஒரு பேருந்தில் தீப்பற்றியது. பிறகு அடுத்தடுத்து பேருந்துகளில் தீ வேகமாக பரவியது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பல தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்தனர். மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்