திருச்சி, நகரியம் கோட்டத்திற்குட்பட்ட . இ.பி.ரோடு துணை மின்நிலையத்தில் 17.12.2025 (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை இ.பி.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார் ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கா.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.