தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களே உள்ளதால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கும் பணியையும் அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன. இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 3 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்து உள்ளது. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் வந்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.