Rock Fort Times
Online News

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று (டிச.12) பிறந்த நாள் ஆகும். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம். மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம். “ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அரைநூற்றாண்டாக கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.” மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும், ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்