துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி:* வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 4 அமைச்சர்கள் பரிசு வழங்கினர்!
தமிழ்நாடு துணை முதல்வர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் எழில்மாறன் செல்வேந்திரன் ஏற்பாட்டில், திருச்சி உறையூர் செல்வேந்திரன் வளாகத்தில் மாநில அளவிலான சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திரைப்பட இயக்குனர் போஸ் வெங்கட்,, நாஞ்சில் விஜயன், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.