திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர் பகுதியில் அப்பகுதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கு ரூ.48.85 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பூங்கா அமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பூங்கா கட்டக்கோரியும் சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று(டிச.11) புத்தூர் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments are closed.