விஜய்யின் முன்னாள் மேலாளரும், ‘புலி’ பட தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு மேலாளராக இருந்தவர் பி.டி.செல்வகுமார். விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை தயாரித்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அண்மையில், விஜயை சுற்றி சகுனி கூட்டம் இருக்கிறது. இதை விஜய் கண்டறிய வேண்டும் என பரபரப்பாக பேட்டியளித்து இருந்தார். இந்நிலையில் இன்று(டிச.11) திமுக தலைவரும், முதல் வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

Comments are closed.