2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் விருப்ப மனு…!
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டன. அதன் ஒரு பகுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறத் துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் பி.செந்தில்நாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இன்று (டிச.10) தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். அதன்படி திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல மாவட்ட அவை தலைவரான சாத்தனூர் எம்.எஸ்.ராமலிங்கம்,மாவட்ட துணைச் செயலாளர் தனசிங், பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் வேத ராஜன், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்லா, மணப்பாறை நகர செயலாளர் மதிவாணன், மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் நல்லசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரம், பொன்னம்பட்டி பேரூராட்சி செயலாளர் சாகுல், மணப்பாறை நகர இணை செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகளும் தலைமைக்கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

Comments are closed.