அனுமந் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றும் விழா…* டிச.19ம் தேதி நடக்கிறது!
அனுமந் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரபல ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றும் விழா டிசம்பர் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவினை முன்னிட்டு 19ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், காலை 7 மணி முதல் தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றுதல் விழா, இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வருதல் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கோவில் செயல் அலுவலர் செ.செ.சரண்யா, தக்கார் ச.வினோத்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Comments are closed.