Rock Fort Times
Online News

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு…!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில்  ஊழியர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி மண்டல அலுவலகத்தில் இன்று (டிச.10) நடைபெற்றது. துணை மேலாளர்(பணியாளர்) ஆர். இராமநாதன் முன்னிலையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன்(வழிவசூல் தாள்), சுரேஷ்குமார் (வணிகம்), புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்), ராஜேந்திரன் (கட்டிடம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்