Rock Fort Times
Online News

கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு- * பிரதமர் மோடி இரங்கல்…!

கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள பிரபல கேளிக்கை விடுதி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள அர்போரா கிராமத்தில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவா காவல்துறை உயர் அதிகாரி அலோக் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பம்போலிமில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்