திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் பிரசாந்த் யாதவ் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர் மேற்பார்வையில், திருச்சி ஆர்.பி.எப். ஆய்வாளர் ரமேஷ் தலைமையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் செல்வராஜா, இளையராஜா, ஜெயவேல் மற்றும் எம்.பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று(06-12-2025) திருச்சி ரயில் நிலையத்தில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹவுரா–திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில், நடத்திய சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பைகள் கேட்பாரற்று கிடந்தன. இந்தப் பைகளுக்கு யாரும் உரிமை கோராததால் அதை சோதனை செய்தபோது, 36 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ரயிலில் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Comments are closed.