Rock Fort Times
Online News

திருச்சி எம்பி துரை.வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு சிறந்த சமூக நல்லிணக்கத்திற்கான விருது…!

2025-26-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் கூர்ந்தாய்வு குழு மதிப்பீடு செய்து கள ஆய்வு மேற்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசிடம் சமர்ப்பித்தது. அரசு செயலாளர் தலைமையிலான தேர்வு குழு சிறந்த 10 ஊராட்சிகளை தேர்வு செய்தது. அந்தவகையில் 2025- 26ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருதுக்கு கீழ்க்கண்ட 10 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

1. ராமநாதபுரம்- மேலமடை கிராம ஊராட்சி

2. விழுப்புரம்- பறையனந்தாங்கல்

3. தென்காசி- கே.அலங்குளம்

4. தஞ்சாவூர்- சூரியனார் கோவில்

5. சேலம்- மணி விழுந்தன்

6. தஞ்சாவூர் வெங்கட சமுத்திரம்

7. செங்கல்பட்டு- மண்ணிவாக்கம்

8. கோவை- ஒட்டர்பாளையம்

9. தென்காசி- கலிங்கப்பட்டி

10. நாகை- தேவூர் இதில், கலிங்கப்பட்டி கிராம ஊராட்சி திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோவின் சொந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்