அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!
சட்டமேதை அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் இன்று (டிச.6) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின்குமார், காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட கழகச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.