திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.5.68 லட்சம் செலவில் குடிநீர் வசதி- பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார், அமைச்சர் அன்பில் மகேஷ்…!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளியூர் கிராம மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட போர்வெல் சின்டெக்ஸ் தொட்டி மற்றும் மோட்டார் அமைப்பினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(டிச.1) மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும், வேங்கூர் அசோக் நகரில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைப்பினையும் திறந்து வைத்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.