Rock Fort Times
Online News

டெல்டா உழவர்களை காப்போம்: “டிட்வா” புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு லட்சம் ஏக்கர் வரை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்நிலையில் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘டிட்வா’ புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்! அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்கு பருவமழை, கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் மற்றும் வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளைத் தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்