திருச்சி மாநகராட்சி 25-வது வார்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் நியமன மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்பு…!
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று(28-11-2025) நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி 25-வது வார்டு உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மாற்றுத்திறனாளி நியமன மாமன்ற உறுப்பினராக தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.

Comments are closed.