Rock Fort Times
Online News

நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ முனைவர் பட்டம்: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார். இவர் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 1967-ம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையை தந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர் கடைசியாக 2001-ம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவக்குமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புமிக்க முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(28-11-2025) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்