சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பெரிய கருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குதொடரப்பட்டது. அதில், ரூ.1.2 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் பெரியகருப்பனை சிவகங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

Comments are closed.